90s பிடித்த பிரபலமான “டிராகன் பால்” கார்ட்டூனிஸ்ட் காலமானார்!

0
77

ஜப்பானை சேர்ந்த பிரபலமான “டிராகன் பால்” காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் கார்ட்டூன்களை உருவாக்கிய 68 வயதான அகிரா டோரியாமா காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் 1984 ல் முதன்முதலில் எண்ணற்ற அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களை உருவாக்கி உலகம் முழுவதும் வெளியிட்டுள்ளார்.

எதிரிகளிடமிருந்து பூமியை பாதுகாக்கும் அவரது மாயாஜால வீடியோ கேம்கள் சிறுவர், சிறுமிகளை கவர்ந்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார்.

இந்த நிலையில் அகிரா டோரியாமா தலையில் மூளை பகுதியில் ரத்த கசிவு காரணமாக அவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (08-03-2024) சிக்க்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் இணையதளத்தில் தகவல் வைரலாக பரவியது. அகிரா டோரியாமா மறைவுக்கு அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.