டிவி சீரியல் சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரிகள்
ஜனக், களாஷ், ஹபி உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டோலி சோகி. இவருக்கு அமந்தீப் சோகி என்ற சகோதரி இருந்தார். இவரும் பெடமீஸ் டில் என்ற சீரியலில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் அமந்தீப் சோகி மஞ்சள் காமாலையாலும், டோலி சோகி கர்ப்பவாய் புற்றுநோயாலும் பாதிக்கப்பிருந்தனர். இதனையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
உயிரிழப்பு
இந்நிலையில் மந்தீப் சோகி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது சகோதரி டோலி சோகி இன்று காலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இரு நாட்களில் சகோதரிகள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.