சில்ஹெட்டில் புதன்கிழமை (06) நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் மூன்றாவது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவு காரணமாக இலங்கை அணி வீரர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
மேலும், மூன்றாம் நடுவரின் இந்த முடிவின் உதவியுடன் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கைகயை தோற்கடித்தது.
பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
மார்ச் 04 ஆம் திகதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இலங்கை மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி சில்ஹெட்டில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களுக்கு 165 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1:1 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.
சர்ச்சைக்குரிய நடுவரின் முடிவு
166 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸ் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.
நான்காவது ஓவரின் ஆரம்பத்தில் இலங்கை வீரர் பினுரா வீசிய பந்தை சௌமியா சர்க்கார் அடித்தார். அப்போது பந்து துடுப்பாட்ட மட்டையில் உரசி விக்கெட் காப்பாளரின் கைக்கு சென்றது. இதற்கு கள நடுவரும் அவுட்டு கொடுத்து விட்டார்.
எனினும் சௌமியா சர்க்கார் திடீரென்று இதற்கு டிஆர்எஸ் கோரினார். இந்த கோரிக்கையானது மைதானத்தில் இலங்கை இலங்கை வீரர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்ட பிறகும் இவர் ஏன் டிஆர்எஸ் கேட்கிறார் என்று சந்தேகம் அடைந்தனர்.
இதனை அடுத்து மூன்றாம் மசுதுர் ரஹ்மான் (Masudur Rahman) நடுவர் இதனை சோதித்துப் பார்த்தபோது பந்து, துடுப்பாட்ட மட்டையுடன் உரசி செல்வதை சிஸ்னிக்கோ மீட்டரில் தெளிவாக காட்டியது.
எனினும், மூன்றாம் நடுவர் அதற்கு நாட் அவுட் வழங்கினார். இந்த சர்ச்சைக்குரிய முடிவானது இலங்கை கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதையடுத்து அதிர்ச்சடைந்த இலங்கை அணி வீரர்கள் நடுவரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் கள நடுவர்கள் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி இலங்கை வீரர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் தொடர்ந்து இலங்கை வீரர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இதனை அடுத்து ஆட்டத்தை தொடருமாறு நடுவர்கள் கூறிக் கொண்டதை அடுத்து மிகவும் ஏமாற்றத்துடன் இலங்கை அணியினர் போட்டியை மீண்டும் ஆரம்பித்தனர்.
இந்த சாதகத்தை பயன்படுத்திக் கொண்டு பங்களாதேஷ் அணி 18.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இந்த இன்னிங்ஸில் சௌமியா சர்க்கார் 22 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்து ஆட்மிழந்தார்.
இலங்கை – பங்களாதேஷ் நாகினி ஆட்டம்
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 2018 இலங்கையில் நடந்த நிதாஹாஸ் டிராபியின் போது கிரிக்கெட்டுக்கு பிரபலமற்ற நாகினி நடனக் கொண்டாட்டத்துடன் இது ஆரம்பித்தது.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போது, இருவருக்கும் இடையேயான லீக் நிலைப் போட்டி, அரையிறுதித் தகுதியில் சிறிய பங்குகளுடன், மற்றொரு பரபரப்பான விவாதத்திற்கு வழிவகுத்தது.
அஞ்சலோ மெத்தியூஸ் துடுப்பாட்ட காலக்கெடுவை மீறியதாக சர்ச்சைக்குரிய வகையில் மூன்றாம் நடுவரால் ஆட்டமிழப்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.