சச்சினின் போலிங்: அடித்து விளாசிய நடிகர் சூர்யா: இணையத்தை ஆக்கிரமித்துள்ள காணொளி!

0
115

நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் சச்சின் டெண்டுல்கரின் மும்பை அணியும் நேற்று ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். துவக்க நிகழ்ச்சி என்பதால் சூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி விளையாடினர். மேலும் அந்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மும்பையில் நடிகர் சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவுடன் வசித்து வரும் நிலையில் மும்பையில் நடைபெற்ற தொடக்க விழாவை காண சூர்யாவின் குழந்தைகளும் வந்திருந்தனர். இதன்போது சுரேஸ் ரெய்னாவுடனும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ராம் சரணும் ஸ்ரீநகர் கே வீரின் உரிமையை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், மஜி மும்பை அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.