இந்திய கடற்படையில் “எம் எச் 60 ஆர்” ஹெலிகாப்டர்கள் இணைப்பு

0
99

 இந்திய கடற்படையில் ‘எம்ஹெச் 60ஆர் சீஹாக் ஹெலிகாப்டர்கள் நேற்று (06.03.2024) இணைக்கப்பட்டுள்ளன.

கேரளத்தின் கொச்சியில் உள்ள ‘ஐஎன்எஸ் கருடா’ தளத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஆர். ஹரி குமார் தலைமை வகித்தார்.

அமெரிக்காவிடமிருந்து 4-ஆம் தலைமுறை 24 எம்ஹெச் 60ஆர் சீஹாக் ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த 2020 இல் கையொப்பமானது.

இதுவரை 6 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகளை அழிக்கும் திறன் பெற்றவை.

தன்னைத் தாக்க வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் ‘சாஃப்’ மற்றும் ‘அகசிவப்பு தீப்பொறி’ அமைப்புகள் இந்த ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையில் இந்த வகை ஹெலிகாப்டர்களில் மட்டுமே இத்தகைய தற்காப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.