ரயிலில் வாழ்க்கை நடத்தும் சிறுவன்!

0
103

ரயில் வாழ்க்கை நடத்தும் சிறுவன் ஒருவபற்ரிய சுவாரஸ்ய தகவ்ல வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள லாஸ் ஸ்டோலி என்பவர் தனது 15 வயதில் இருந்தே ரெயிலில் வாழ ஆசை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.

இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லாஸ் ஸ்டோலி அதனை பொருட்படுத்தாமல் தினமும் ரெயிலிலேயே தனது வாழ்க்கை பயணத்தை கழிக்க தொடங்கினார்.

 ஆண்டுக்கு $17,000 செலவு

தற்போது 17 வயதாகும் அந்த ஜெர்மன் சிறுவன் ரயிலில் வாழ்வதற்காக ஆண்டுக்கு $17,000 செலவழிக்கின்றாராம்.

லாஸ் ஸ்டோலி ,தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்வதுடன் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார். இதற்காக அதிக செலவு செய்கிறார்.

ஆனால் ஜெர்மன் ரெயில்வே வழங்கும் வருடாந்திர ரெயில் அட்டையை பெற்றுள்ள லாஸ் ஸ்டோலி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாமாம்.

இதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம் செலவு செய்கிறார். அதே நேரம் அவர் தான் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானமும் ஈட்டி வருகிறார்.