தலையில் தீ வைத்து பொங்கலா?: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விநோத வழிபாடு

0
94

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோயில் திருவிழாவில் பக்தரின் தலையில் பொங்கல் வைத்து விநோத வழிபாடு செய்தமையானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

என்னது தலையில் பொங்கலா? என யோசிக்கிறீங்களா? ஆம்… குறித்த காணொளியில் நிஜமாகவே தலையில் தீயிட்டு பொங்கல் வைக்கின்றனர். பார்ப்பதற்கு விநோதமாக இருந்தாலும் இது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

தற்போது ட்ரெண்டாகும் தலையில் பொங்கல்

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது சேப்பாக்கம். இந்தக் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஐந்தாம் நாள் விழாவில் அங்காளம்மன் சாமி வீதி உலா வரும்போது பக்தர் ஒருவர் அமர வைத்து அவரது தலையில் துணியால் தீவைத்து அதில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அந்தப் பொங்கல் வீதி உலா வரும் சாமிக்கு படையலாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுகிறவர்கள் உடல் நலம் பூரண குணமடைவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த வினோத திருவிழாவை காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். இதே போன்று தான் இந்த வருடமும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த செய்தியை இந்திய ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளில் வெளியான காணொளி…