சாந்தனின் வித்துடலிற்கு யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; உரிமை மண்ணுக்குப் பதிலாக விபூதி: சாந்தன் உடலை தெய்வீகமாக்கினார் தாயார்

0
137

யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சாந்தனுக்கு அமைந்திருப்பதாகவும் தன் தலைவனின் வீட்டையும் ஒரு தடவை பார்த்துவிட்டு எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரனாக விதைகப்பட்டுள்ளார் என சமூக ஆர்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைசாலையில் இருந்து உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து திருச்சி சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்திருந்தார்.

பெரும் கதறல் மத்தியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சாந்தனின் வித்துடல் சாந்தன் அவரின் இறப்பு செய்தி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சாந்தனின் உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதி

மறைந்த சாந்தனின் உடல் விதைக்கப்பட்ட போது உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதியை தூவி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சாந்தன் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இன்றைய தினம் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்றைய தினம் அவரது உடல் எள்ளாக்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது சாந்தனின் உடலுக்கு மண்ணுக்கு பதிலாக விபூதி தூவி அடக்கம் செய்யப்பட்டார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக மகனின் வருகையை எதிர்ப்பார்த்திருந்த தாய், சாந்தனின் உயிரற்ற உடலை மட்டுமே காணமுடிந்தது.

இந்நிலையில் மகனை புனிப்படுத்தும் வகையில் சாந்தனின் தாய் உள்ளிட்டவர்கள் விபூதி தூவி அவரது உடலை அடக்கம் செய்துள்ளனர். சாந்தனின் புகழுடல் சற்று முன்னர் எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரபாகரன் வாழ்ந்த காணிக்குள் சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வீட்டின் காணிக்குள் வைத்து சாந்தனின் பூதவுடலுக்கு உணர்வுப்பூர்வமாக பொது மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாந்தனுக்கு சீமான் உணர்வுபூர்வ அஞ்சலி

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையவர்களை விடுவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த வகையில் முருகன், ஜெயக்குமார், ரொபேட் பயஸ் ஆகியோரை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

வல்வெட்டித்துறை நோக்கி நகரும் ஊர்வலம்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சந்தி ஊடாக சாந்தனின் உடலம் தாங்கிய வாகனப் பேரணி நகர்ந்து செல்லவுள்ளதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை வல்வெட்டித்துறை சந்தியில் அஞ்சலி நிழக்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களோடு மக்களாக புலனாய்வு பிரிவினர்

சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் மக்களோடு மக்களாக கலந்துளள்ள புலனாய்வு பிரிவினர் கடுமையாக கண்காணிப்புகளை மேற்கொண்டு வருதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரியகிடைத்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களின் துயரத்துடன் நகரும்

சாந்தனின் இறுதிப் பயண ஊர்வலம் நகரத் தொடங்கியது. அறிவகம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வினையடுத்து பெருந்திரளான மக்களின் மலரஞ்சலியுடன் ஊர்வலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

சாந்தனுக்கு வீர வணக்கம் செலுத்தினார் சட்டத்தரணி புகழேந்தி

பிறந்த மண்ணிற்காகவும் தமிழினத்திற்காவும் உயிர்நீத்த மாவீரன் அமரர் சாந்தனுக்கு தனது வீரவணக்கம் என அறிவகம் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி உரையில் சட்டத்தரணி புகழேந்தி புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நகர்ந்த வண்ணம் உள்ளது.

சாந்தனின் மரணம் இலட்சியப் பயணத்திற்கு உந்து சக்தி

சாந்தனின் மரணம் தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கு உந்து சக்தியாக அமைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

சாந்தனின் சடலம் பூர்வீக இல்லத்தில்

சாந்தனின் சடலம் அவர் பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறிது நேரம் வைக்கப்பட்டது. இதன் போது தாயார் சாந்தனுக்கு விபூதியிட்டு தமது துயரத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இறுதி ஊர்வலம் மீள ஆரம்பமாகியுள்ளது.

இந்தியா தவறிழைத்துவிட்டதாக மக்கள் விசனம்

சாந்தனின் விடயத்தில் இந்திய அரசு தவறிழைத்துவிட்டதாக அஞ்சலியில் கலந்துகொண்டு உரையாற்றிய பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாந்தனின் விடுதலைக்குப் பின்னர் அவரை இலங்கைக்கு உடனடியாக அனுப்புவதற்கு இந்தியா தவறிவிட்டதாகவும் சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்ட சாந்தன் மரணமடைந்ததாகவும் மக்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

சாந்தனின் கல்லறை நோக்கிய பயணம் ஆரம்பம்

உயிரிழந்த சாந்தனின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் இறுதி பயணம் ஆரம்பமாகியுள்ளது. பெருந்திரளான மக்கள் சூழ்ந்திருக்க பயணம் ஆரம்பமானது. இந்து சமய சடங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நல்லடக்கத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளது.

உயிரிழந்த சாந்தனின் இறுதி கிரியைகள் ஆரம்பம்

உயிரிழந்த சாந்தனுக்கான இறுதி கிரியைகள் ஆரம்பமாகியுள்ளது. அரசியல்வாதிகள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

சாந்தனின் இறுதிப் பயண விபரம்

உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கான இறுதி கிரியைகள் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை வீட்டில் கிரியைகள் நிறைவுபெற்று நல்லடக்கத்திற்காக பூதவுடல் 12.30 இற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

சாந்தனின் பூதவுடல் அறிவகம் சனசமூக நிலையம், தர்மகுலசிங்கம் சனசமூக நிலையம், வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையம், நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக பயணித்து எள்ளாங்குளம் பொது மாயனத்தில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சாந்தனின் இளவயது புகைப்படம்

மரணமடைந்த சாந்தனின் இளவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு அவரது 21 வது வயதில் குறித்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் உடல்

உடல்நல குறைவு காரணமாக இந்தியா – சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்று (04) இரண்டாவது நாளாக உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டு தொடர்ந்து திருச்சி சிறப்பு வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சாந்தன் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.

இவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சாந்தனின் உடல் நேற்று முன்தினம் (03) ஞாயிற்றுக்கிழமை வவுனியா, கிளிநொச்சி ஆகிய இடங்களில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், சாந்தனின் பூதவுடல் நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.