நீ பிச்சைக்காரனா..! ஆனந்த் அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய கதை

0
130

இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் வீட்டு திருமண விழாவில் மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனந்த் அம்பானி திருமணம்

இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கடந்த 3 நாட்களாக ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தில்  உலகளவில் பிரபலமான பிரபலங்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த திருமண கொண்டாட்டம் கண்களை பறிக்கும் நிகழ்வாக இருந்தது.

உலகிலேயே மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக அம்பானி குடும்பத்தின் நிலையை இது மேலும் உறுதிப்படுத்தியது.

கிண்டல் செய்யப்பட்ட ஆனந்த் அம்பானி

மிகப்பெரிய செல்வத்தை காட்சிப்படுத்திய இந்த திருமண கொண்டாட்டத்தில் பேசிய மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பில்லியனரின் மகனாக இருந்தபோதிலும், தனது தந்தைக்கு சொந்தமான துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் (Dhirubhai Ambani International School) படித்த போதிலும், தனக்கு வாரந்திரா பாக்கெட் மணியாக(weekly pocket money) வெறும் ரூ.5 மட்டுமே தன்னுடைய பெற்றோர்கள் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவரது சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை “பிக்‌காரி”(bikhari) என்று கிண்டல் செய்தனர் என்றும் ஆனந்த அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்காரி என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் “பிச்சைக்காரர்” என்று பொருள்.

ஆனந்த அம்பானியின் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட போது தந்தை முகேஷ் அம்பானி மற்றும் தாய் நீதா அம்பானி குலுங்கி குலுங்கி சிரித்ததாக கூறப்படுகிறது.

பழைய பேட்டி

பழைய பேட்டி ஒன்றில், ஆனந்த் அம்பானியின் தாய் நீதா அம்பானி இந்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ஆனந்த, ஈஷா, உட்பட மூன்று குழந்தைகளுக்கும் பணத்தின் மதிப்பை புகட்டுவதற்காக அனைவருக்கும் ரூ.5 என ஒரே மாதிரியான பாக்கெட் மணியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

40 பில்லியன் டொலர் சொத்துக்கு அதிபதி

பிச்சைக்காரன் என்று சிறுவயதில் கிண்டல் செய்யப்பட்டாலும், படிப்பில் சிறந்து விளங்கிய ஆனந்த அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, வேகமாக தொழில் துறையில் சாதித்தார்.

தற்போது அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முக்கியமான பிரிவான ரிலையன்ஸ் New Energy பிரிவை வழிநடத்துகிறார்.

இவரது சொத்துமதிப்பு மட்டும் சுமார் 40 பில்லியன் டொலர்  என்பது குறிப்பிடத்தக்கது.