மக்களின் கண்ணீர் மத்தியில் சாந்தனின் வித்துடல் எள்ளங்குளத்தில் நல்லடக்கம்!

0
83

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் உள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையில் சாந்தனின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்கள் சிறையில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் கடந்த 28 ஆம் திகதி தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் உடல் நலக்குறைவால் காலை உயிரிழந்தார். சாந்தனின் மரணம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தொடர் நெருக்கடியின் மத்தியில், கடந்த 02 ஆம் திகதி இந்தியாவிலிருந்து சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திபவனி மக்களின் அஞ்சலிக்காக தமிழர் பகுதிகளுக்கு சென்றது. 

இதனையடுத்து இன்றையதினம் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் இறுதியாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.