தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்க்காமல் இந்திய பிரதமர் மோடியை வரவேற்க வந்த தொண்டர்!

0
97

தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்க்காமல் தன்னை வரவேற்க வந்த தொண்டர் குறித்து இந்திய பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

வரவேற்க வந்த தொண்டர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிறைவு பெற்ற திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

அந்தவகையில் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், பிரதமர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை முழுவதும் தொண்டர்கள் சூழ்ந்தனர். அப்போது, அஸ்வந்த் பிஜாய் என்ற பாஜக தொண்டர் மோடியை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.

இந்த பாஜக தொண்டருக்கு இரட்டை குழந்தைகளை பிறந்த நிலையில், குழந்தைகளை பார்க்காமல் மோடியை வரவேற்பதற்கு வந்துள்ளார்.

மோடியின் பதிவு

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மிகவும் சிறப்பு வாய்ந்த சந்திப்பு! சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அஸ்வந்த் பிஜய் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார்.

இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்.

நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.