கண்டியில் பூத்துக் குலுங்கும் 100 வயது பூமரம்… படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

0
125

கண்டி மாவட்டத்தில் உள்ள புஸ்ஸல்லாவ மெல்போர்ட் தோட்டத்தில் இந்த அரிய வகை பூ மரம் காணப்படுகின்றது.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்தில் பூப்பதற்கு ஆரம்பித்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை இந்த பூக்கள் காணப்படும்.

குறித்த மரத்தில் இலைகள் முற்றாக உதிர்த்து மரம் முழுவதும் மஞ்சள் நிற பூக்களே காணப்படுகிறது.

தற்போது இதை காண்பதற்காக நாளாந்தம் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆங்கிலேயர் காலத்தில் நாட்டப்பட்ட இந்த மரத்திற்கு சுமார் 100 வயதுக்கு மேல் இருக்கும் என நம்பப்படுகின்றது.

நுவரெலியா பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த பூ மரத்தை பார்ப்பதற்கு நாளாந்தம் சுற்றுலா பயணிகளும் படையெடுத்து வருகின்றனர்.