இளமையை மீட்க உதவும் Collagen Cream இனி வீட்டிலேயே..

0
104
Good-looking caucasian middle-aged woman in turban and spa bathrobe after taking shower looking at the mirror while applying beauty creme moisturizer for anti-age anti-wrinkle effect

சருமம் பளபளப்பாகவும் பொலிவாகவும் நெகிழ்வுத் தன்மையோடும் இருக்க கொலாஜன் மிக மிக அவசியம்.

சருமத்தில் கொலாஜன சிதையும்போது தான் வயதான தோற்றம் உண்டாவது முதல் பல்வேறு சருமப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அந்தவகையில் வீட்டிலேயே கொலாஜன் க்ரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன்
  • பாதாம் ஆயில் – 1 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
  • வைட்டமின் ஈ ஆயில் – 1 ஸ்பூன்
  • தேன் – 1 ஸ்பூன்
  • கொலாஜன் பவுடர் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து டபுள் பாயில் முறையில் சூடுபடுத்துங்கள்.

இதை ஆறவிட்டு பின் அதில் கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தேன் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

இவற்றை நன்கு கலந்து கொண்டு அதில் எடுத்து வைத்திருக்கும் கொலாஜன் பவுடரைச் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் மிக்ஸ் செய்யுங்கள்.

அடுத்து ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் இதை எடுத்து மூடி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

கொலாஜன் க்ரீம் அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை மென்மையான க்ளன்சர் கொண்டு நன்கு சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஈரத்தை துடைத்துவிடுங்கள். பிறகு இந்த கொாலாஜன் க்ரீமை அப்ளை செய்து, 5 நிமிடங்கள் நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்து கொள்ளவும்.