இளவரசி கேட் மிடில்டனுக்கு என்ன நடந்தது?: வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

0
110

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி கேட் மிடில்டன் திரிரென காணாமல் பொய்விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இளவரசி கேட் எங்கே? என்ற கேள்வி இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. இளவரசர் வேல்ஸ் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளுடனும் கென்சிங்டன் அரண்மனையில் வசித்து வந்த நிலையிலேயே தற்போது இவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

எக்ஸ் வலைத்தளத்தில் பகிரப்பட்ட பரபரப்பு டுவிட்

“மூன்று குழந்தைகளுக்கு தாயான கேத், பிரசவத்துக்கு பின், குழந்தை பிறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு வெளியே ஒரு சூப்பர்மாடலைப் போல போஸ் கொடுத்த ஒரு பெண்மணி.

அவர் தனது முகத்தை வெளியில் காண்பிக்காமல், சிகிச்சை எடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?” என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவு 6 மில்லியனுக்கும் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில் பலர் கேட் மிடில்டன் காணவில்லை எனப் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த கேள்விதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அரண்மனை ஆலயத்தில் அண்மையில் சிறப்பு வழிபாடொன்று ராணி கமிலா தலைமையில் இடம்பெற்றது. இந்த வழிபாடு நேரலையாகவும் பல ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டிருந்தது.

இந்த வழிபாட்டில் கூட இளளவரசி கேட் பங்குபற்றியிருக்கவில்லை. ஆகவே, இணையவாசிகள் இளவரசியை காணவில்லை என்பதை உறுபடுத்தியது போல் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

கேட் – வேல்ஸ் மனவருத்தம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து இளவரசர் வேல்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையில், “சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த கருத்துக்கள் தவறானது. அவ்வாறான கருத்துக்களால் நாங்கள் மனவருத்தத்துக்கு ஆளானோம். இளவரசி தற்போது நலமாக உள்ளார். அத்தோடு இது எங்களுடைய தனிப்பட்ட விடயம் இதில் யாரும் தலையிட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

இளவரசிக்கு உண்மையில் என்ன ஆனது?

இளவரசி பிரசவத்தின் பின் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறு காரணமாக சத்திரசிகிச்சை ஒன்றை செய்துள்ளார். ஜனவரி மாதம் முதல் இளவரசி கேத் மிடில்டன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கென்சிங்டன் அரண்மனை ஒரு சில வாரங்கள் முன் செய்தி வெளியிட்டது.

கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட செய்தியில், இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அவர் ஈஸ்டர் பண்டிகை வரை (மார்ச் 31 வரை) அரச கடமைகளை செய்ய மாட்டார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அரச கடமைகளை செய்வதில் இருந்து விலகியுள்ளார் என்று சொல்லப்பட்டது.

கோமா நிலைக்கு சென்றார்?

ஸ்பானிஷ் செய்தியாளர் கான்சா காலேஜா, வெளியிட்டுள்ள செய்தியில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

கேட்டின் உடல்நிலை அரண்மனை வெளியிட்ட தகவல்களை விட மோசமாக உள்ளது. அவர் ஆபத்தில் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிறகான உடல்ரீதியான சிக்கல் காரணமாக கேத் கோமா நிலைக்குச் சென்று விட்டார். இதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அரண்மனை மறுப்பு

செய்தியாளர் கான்சாவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள கென்சிங்டன் அரண்மனை, இந்த தகவல் கேலிக்குரியது. இளவரசி நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார் என்று கூறியுள்ளது.

இதனை அரண்மனை மறுத்த பின்பும் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் பிரிட்டன் அரசக் குடும்பத்திலேயே அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவர் என அறியப்படுகிறார் கேத் மிடில்டன். அப்படிபட்டவரின் உடல்நிலை மோசமானது என்றால் அவரது ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படாதது ஏன் என்பதே இங்கிலாந்து மக்களின் கேள்வியாக உள்ளது.

கேட் மிடில்டனின் உடல்நிலை எப்படி உள்ளது?

ஜனவரி 16ஆம் திகதி “திட்டமிட்ட வயிற்று அறுவை சிகிச்சைக்கு” பிறகு இளவரசி “நன்றாக இருக்கிறார்” என்று கேட்டின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 29ஆம் திகதி NBC நியூஸிடம் தெரிவித்தார்.

ஜனவரி 17 அன்று அரண்மனை உத்தியோகபூர்வமாக இதை அறிவித்தது, ஏன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் வெளியிடவில்லை. ஆனால் அவருக்கு புற்றுநோய் போன்ற நோய்கள் இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கேட் குணமடைந்ததால் ஜனவரி 18 அன்று மருத்துவமனைக்குச் சென்றபோது வில்லியம் அவரது மனைவியுடன் கலந்துரையாடினார் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 29ஆம் திகதி லண்டன் கிளினிக், தனியார் மருத்துவமனையிலிருந்து, வெளியேறினார்.

ஜனவரி 29ஆம் திகதி அன்று அரண்மனை அறிக்கையின் படி:

“வேல்ஸ் இளவரசி அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து விண்ட்சருக்கு வீடு திரும்பியுள்ளார். அவர் நலமாக உள்ளார்“ என அறிவித்தது.