பட்டி தொட்டி எங்கும் ஒலித்த காவாலா பாடல்; தமன்னாவுக்கே டப் கொடுத்த யானையின் டான்ஸ்!

0
84

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவான காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் வேற லெவல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் அந்தப் பாடலுக்கு யானை ஒன்று நடனம் ஆடுவது போன்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

இரண்டு கால்களையும் தாறுமாறாக அசைத்து சாய்ந்து ஸ்டெப் எல்லாம் போட்டு ஆடி இருக்கும் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் யானையார் காவாலா பாடல்லுக்கு நடனமாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பல நடிகைகளின் முகங்களை ஏஐ மூலம் மாற்றி தமன்னா ஆடியோ வீடியோவுக்கு டான்ஸ் ஆடியது போல ரீல்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகின.

இந்நிலையில், காவாலா பாட்டுக்கு காட்டு யானை ஒன்று நடுரோட்டில் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. எனினும் அது உண்மையில் யானை இல்லை என்றும் பொம்மை யானையே காவாலா பாடலுக்கு நடனமாடியதாகவும் கூறப்படுகின்றது.