சாந்தன் மரணம்; இந்திய இலங்கை அரசாங்கங்கள் மீது சீறிய தமிழ் எம்.பிக்கள்!

0
72

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீகாந்தி கொலை வழக்கில் கைதாகி 32 ஆணடுகள் சிறவாசம் அனுபவித்த ஈழதமிழரான சாந்தன் விடுதலை செய்யபட்டிருந்த நிலையில் தாயகம் திரும்ப காத்திருந்தபோது உலநலக்குறைவால் தமிழகத்தில் சென்னையில் காலமானார்.

இந்நிலையில் சாந்தன் மரணத்திற்கு இந்திய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும் என எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்.

மனிதாபிமானம் பின்பற்றப்படவில்லை

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனை வலியுறுத்தினார். சாந்தன் விடுதலை விஷயத்தில் மனிதாபிமானம் பின்பற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பேசுகையில், இலங்கை அரசாங்கத்தை போல இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என குற்றம்சாட்டி உள்ளார்.

அதோடு தீர்வை தருவதாக இருந்திருந்தால் எப்போதோ தந்திருக்க வேண்டும் எனவும் இந்திய அரசாங்கத்தை துரைராசா ரவிகரன் விமர்சனம் செய்துள்ளார்.

அதேவேளை கடந்த 28 ஆம் திகதி சாந்தன் சென்னையில் உயிரிழந்த நிலையில் அவரது பூதவுடன் நேற்றையதினம் தாயகம் வந்தடைந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடல் நாளையதினம் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.