இந்தியா புவியல் ரீதியாக பிளவுப்படுமா?: டெக்டோனிக் தகட்டின் இரு பகுதிகளுக்கு இடையில் செங்குத்தான விரிசல்

0
109

இமயமலை மலைத்தொடருக்கு கீழே உள்ள இந்திய மற்றும் யூரேசிய கண்டத்தின் டெக்டோனிக் தகடுகளின் மோதலால் இமயமலை உயரும் என்பதை விஞ்ஞானிகள் சில காலமாக அறிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியத் தட்டின் ஒரு பகுதி யூரேசியத் தட்டின் கீழ் சறுக்கிச் செல்வதால், அதன் அடுக்கு பிரிவிதை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த இயற்கை செயற்முறையானது இந்தியாவை புவியியல் ரீதியாக பிரிக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பொதுவாக இரண்டு டெக்டோனிக் தகடுகள் மோதும்போது ஒன்று மற்றொன்றின் கீழ் சரியும். இந்த செயல்முறையானது கீழ்நிலை என அழைக்கப்படுகிறது.

இந்தோ-யூரேசியா டெக்டோனிக் தடுகளுக்கு இடையிலான மோதலால் உருவான இமயமலை

இரண்டு கண்ட தட்டுகளும் ஒரே விதமாக இருப்பதால், புவியியலாளர்களால் எந்தத் தட்டு மற்றைய தட்டுடன் இணைக்கிறது என்பதை உறுதியாக கண்டறிய முடியாதுள்ளது.

இந்தியத் தட்டின் அடர்த்தியான கீழ் பகுதி,மேல் பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இரண்டுக்கும் இடையில் ஒரு செங்குத்தான விரிசலை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தோ-யூரேசிய டெக்டோனிக் தகடுகளுக்கு இடையில் 60 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான மோதல்களால் ஏற்பட்ட மாற்றமே தற்போதுள்ள இமயமலையாகும்.

கடல் தகடுகளை போலன்றி, கண்டத் தட்டுகள் தடிமனாகவும், இலகுவாகவும் இருப்பதால் பூமியின் மேலடுக்கில் எளிதில் மூழ்காது. புவி இயற்பியலாளர்களின் சர்வதேச குழுவினர் அண்மையில், திபெத்திய பீடபூமிக்கு அடியில் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தனர்.

இந்திய தட்டு உடைய வாய்ப்புள்ளது

இந்த நிலையில், யூரேசிய தட்டுக்கு அடியில் சறுக்கல் ஏற்பட்டுள்ளதால்,இந்திய தட்டு உடைய வாய்ப்புள்ளது. யூரேசிய தட்டுக்கு இடையிலான எல்லையில் பிளவுகள் இருப்பதையும் குழுவினர் கண்டறிந்ததுள்ளனர்.

நில அதிர்வு அலைகள் மற்றும் ஹீலியம் வாயு மேற்பரப்பில் கசிவது இந்த அடுக்கு பிரிதல் செயல்முறைக்கு காரணமாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.