சாந்தனுக்கு தாயகத்தில் அஞ்சலி: மக்கள் மத்தியில் பலத்த சோகம்

0
92

தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு தாயகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவிற்கு வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்களின் ஏற்பாட்டில் சாந்தனுக்கு கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை சாந்தனின் உயிரிழப்பிற்கு பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகின்றது.

இதேவேளை சாந்தனின் பூதவுடலை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.