மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக் கீரை சூப்…

0
129

முருங்கைக் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது.

மற்ற உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளது. ரத்தம் குறைவாக இருப்பவர்கள் முருங்கைக்கீரையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தற்போது ஆரோக்கியமான முறையில் முருங்கைக்கீரையில் சூப் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் – 5

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 டம்ளர்

செய்முறை :

முருங்கைக் கீரையை நன்கு காம்புகள் நீக்கி உருவி எடுத்து, சுத்தமான தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாய் ஒன்றில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அது சூடானதும், அதில் முருங்கை இலைகளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.

பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும். 

இரண்டு டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளராக வற்றிய பின்பு அடுப்பை அனைத்துவிட்டு சூப்பை பறிமாறலாம். காரம் தேவையெனில் சிறிது மிளகுத் தூள் சேர்த்தக் கொள்ளவும்.