வைத்தியர்களின் போராட்டத்தை நிறுத்த காலக்கேடு: தென்கொரிய அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

0
268

போராட்டத்தை கைவிட்டு பெப்ரவரி மாத முடிவிற்குள் பணிக்கு திரும்புமாறு தென்கொரிய அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் வைத்தியர்களுக்குத் தெரிவித்துள்ளது.

போராட்டத்தை முடிவுக் கொண்டுவருவதற்கு அவர்களுக்கு காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில் அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களின் அனுமதிப் பத்திரத்தினை ரத்து செய்யும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் வைத்தியர்கள் எதனையும் பொருப்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வைத்தியர்களின் போராட்டம் காரணமாக நோயாளிகள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவசர பிரிவினைத் தவிர ஏனைய பிரிவுகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன.

தென்கொரிய அரசாங்கம், வைத்தியத் துறையினை விரிவாக்கும் பொருட்டு, வைத்திய மாணவர்களின் அனுமதியினை அதிகரிக்க திட்டம் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இளம் வைத்தியர்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.