தாயின் மரணத்தை தாங்க முடியாமல் உயிரிழந்த மகன்..

0
129

காலி – இந்துருவ பகுதியில் தாயின் மரணத்தால் மகன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழிந்துள்ளார்.

தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட மகன், தனது தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்துருவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மகன் 47 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவார், இவரின் தாய் கடந்த (22.02.2024) ஆம் திகதி உயிரிழந்தமையினால் அவரது மகன் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்திருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.