தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வெளிநாட்டவர் கைது

0
126

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த அயர்லாந்து சுற்றுலா பயணி ஒருவரை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது அவர் ஓட்டிச் சென்ற துவிச்சக்கர வண்டியும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை விஜயம் 

குறித்த சுற்றுலா பயணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.