மீண்டும் திறக்கப்பட்ட ஈபிள் கோபுரம்

0
157

உலகின் பிரசித்தமான பாரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரம் சுமார் ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதன் பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்களுக்கு இடையில் நேற்றைய தினம் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதை அடுத்து பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரம் மூடப்பட்டமையினால் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கான முன்பதிவை இழந்துள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த கோபுரத்துக்கு 14 ஆண்டுகளாக நிறப்பூச்சி பூசப்படவில்லை எனவும், பழுதுபார்க்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பாரிஸ் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது தடவையாக ஈபிள் கோபுர பணியாளர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.