ரஷ்யாவின் போரல் 31 ஆயிரம் உக்ரைன் படையினர் பலி: 180,000 ரஷ்ய படையினரும் பலி என்கிறார் செலென்ஸ்கி

0
79

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் காரணமாக இதுவரை சுமார் 31 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும் ரஷ்யாவின் போரால் காயமடைந்த படையினரின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை. மேலும் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை, அழிவடைந்த சொத்துக்களின் விபரங்களையும் உக்ரைன் அதிகாரிகள் வெளியிடவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் கூறுவது போல் போரில் லட்சக்கணக்கான உக்ரைன் படையினர் கொல்லப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பிரதேசங்களில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – செலென்ஸ்கி

எனினும் உக்ரைன் படையினர் தாக்குதல் காரணமாக சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயடைந்துள்ளனர என செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பிரதேசங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சரியான விபரங்கள் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் போர் காரணமாக 70 ஆயிரம் உக்ரைன் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் கூறியிருந்தனர்.