விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0
73

நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் விலை அதிகரிக்கபடவில்லை.

அதனால் நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அநீதி

இதேவேளை அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் கூறியுள்ளது.