6 ஆண்டுகளின் பின் சந்தித்து கொண்ட உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உயரம் குறைந்த பெண்..!

0
83

உலகின் மிக உயரமான ஆண் மற்றும் உலகின் மிக உயரம் குறைந்த பெண் அமெரிக்காவில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.

உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன்.

இதே போன்று உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படுவர் ஜோதி ஆம்கே.

2009-ம் ஆண்டில், சுல்தான் கோசென் 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சாதனை படைத்தார்.

அதே ஆண்டு, ஜோதி ஆம்கேக்கு உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது. அடுத்ததாக ஆம்கேக்கு 18 வயதாகும் போது, மீண்டும் அளவிடப்பட்டபோது அவரது உயரம் 2 அடி 0.7 அங்குலம் என்பதாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு எகிப்தில் சந்தித்தனர்.

பிரமிடுகள் முன்பாக இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்றளவும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின்பு இவர்கள் இருவரும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மீண்டும் சந்தித்து கொண்டனர்.

அதனுடன் இருவரும் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.