யாழில் சிறீதரனை நேரில் சந்தித்த ஜீவன்

0
139

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலானது இன்று(16) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலின்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

மேலும் நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பங்கேற்புடன் இன்றையதினம் (16) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.