ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்துவைத்துள்ளார்.
இந்த கோவில் கட்டிடம் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் கோவில் உருவாகி உள்ளது.
கோவில் இரும்பு மற்றும் கம்பிகள் எதுவும் இல்லாமல் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் பளிங்கு கற்களை கொண்டு பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்பட்டுள்ளது.
இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழா இன்று (புதன்கிழமை) காலையில் நடைபெற்றுள்ளது.தொடர்ந்து மாலை கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு கோவிலை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் அங்கு நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்கிறார்.