இலங்கையை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை

0
108

கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

குறித்த சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதாவது நாட்டில் கண்டல் தாவர சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிக்காக ஐக்கிய நாடுகளின் உலக மறுசீரமைப்பு முன்னுரிமைக்காக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி உள்நாட்டு நேரப்படி (13.02.2024) முற்பகல் 11.30 மணியளவில் ஜெனிவாவில் அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை இலங்கை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்கு திறம்பட பயன்படுத்தியதை இந்த விருது பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்  (27.02.2024) ஆம் திகதி கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டில் இந்த விருது இலங்கைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபை | United Nations Praised Sri Lanka