இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகிற்கே தலைவர்! – எம்.பி வஜிர அபேவர்தன புகழாரம்

0
60

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க அமோகமான வெற்றியை பெருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் புதிய சாதனையுடன் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்ற சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார் என அவர் தெரிவித்துள்ளார். ரணிலுடன் ஒப்பீடு செய்யக்கூடிய உலகத் தலைவர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகிற்கே தலைவர்! எம்.பி புகழாரம் | Ranil Will Win In Presidential Election Vajira

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோரை விடவும் ரணில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க உலகிற்கே தலைவர் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றவுடன் அனைவரும் ஒன்றிணைந்து அவரை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.

இருப்பினும் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அச்சம் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த 15, 20 ஆண்டுகளுக்கு ஆட்சியை பற்றி பெற்றுக்கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.