TikTok இல் இணைந்தார் அதிபர் ஜோ பைடன்

0
96

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் (Joe Biden) TikTok தளத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் @bidenhq எனும் கணக்கில் அவர் காணொளி ஒன்றைப் பதிவிட்டார். அதுமட்டுமல்லாது அதிபர் ஜோ பைடன் பல தலைப்புகளைப் பற்றிய தமது கருத்துகளை இயல்பாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

TikTok இல் இணைந்தார் அதிபர் ஜோ பைடன் | President Joe Biden Joins Tiktok

TikTok தளத்தை அமெரிக்கா விமர்சனம்

அவருக்கு டிரம்ப்பைப் பிடிக்குமா அல்லது தம்மைப் பிடிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “பைடன்” என்று பதிலளித்தார். கடந்த காலங்களில் சீனாவின் TikTok தளத்தை அமெரிக்க அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அதிபர் பைடன் TikTok இல் இணைந்துள்ளமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்கு அதிபர் ஜோ பைடன் TikTokஇல் சேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.