‘சிறகடிக்க ஆசை’ தொடரிலிருந்து விலகுகிறாரா முத்து?

0
157

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான ‘சிறகடிக்க ஆசை’ தற்போது 300 எபிசோட்களை கடந்துவிட்டது. இதை முன்னிட்டு கதையின் நாயகன்,வெற்றி வசந்த் இன்ஸ்டாவில் லைவ்வில் வந்துள்ளார். அப்போது ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதில், ஒருவர் “நீங்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் சிறகடிக்க ஆசை தொடரில் தொடர்ந்து நடிப்பீர்களா? இல்லை விலகுவீர்களா?“ எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த வெற்றி வசந்த், “நான் இந்த தொடரிலிருந்து எப்போதுமே விலக மாட்டேன். இந்த சீரியல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டாலும் அதில் சுபம் என்ற ஒரு வார்த்தை வரும் வரைக்கும் நான் கதாநாயகனாக இருந்துகொண்டே இருப்பேன்.

இந்த தொடர்தான் எனக்கு மறு வாழ்வைத் தந்தது. திரைப்படங்கள், வெப் சீரிஸ் அனைத்தையும் தாண்டி இந்த சிறகடிக்க ஆசை தொடர்தான் எனக்கு பிரதான வேலை” எனக் கூறியுள்ளார்.