முல்லைத்தீவில் தவறான முடிவால் தற்கொலை செய்த 18 வயது மாணவி!

0
57

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (12-02-2024) புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய நிதர்சினி என்ற மாணவியே இவ்வாறு தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் இருந்த குறித்த மாணவி தனது அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து பிரதேச வாசிகள் அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியொன்றில் தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த 18 வயது மாணவி! | 18 Year Old Student Hanged Herself In Mullaitivu

உயிரிழந்த மாணவியில் உடல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.