மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 13 வயது சிறுமி!

0
61

 மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று (12.02.2024) அதிகாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி காணாமல் போன நிலையில், வவுனியாவில் இருந்து மீட்கப்பட்டு நேற்றைய தினம் (11.02.2024) அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் உள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி வவுனியாவில் உள்ள சிறுவர் நிலையம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நேற்றைய தினம் அங்கிருந்து மீட்கப்பட்டு மன்னார் எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்னாரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட 13 வயது சிறுமி! | 13 Year Old Girl Dead In Mannar

மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் வருகை தந்து சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சிறுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.