நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வசந்த மண்டபத்தினுடைய திரைச்சீலையில் அம்மனின் உருவத்தினை பாபிராஜ் தேவராஜா என்ற இளைஞர் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இலங்கையில் தாய் தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.
இந்நிலையில் பாபிராஜ் தேவராஜா வரைந்த ஓவியம் இணையவாசிகளை சிலிர்க்க வைத்துள்ளது. உயிரோட்டம் மிகுந்த அம்மனின் ஓவியத்தினை பார்த்த பலரும் பாபிராஜ் தேவராஜாவின் திறமையை பாராட்டி வருகின்றனர்.