பேரழகி கிளியோபட்ராவின் மறைக்கப்பட்ட மறுபக்கம்: இவள் அழகுக்கு மயங்காத ஆண்களே இல்லை

0
73

அழகே பொறாமைப்படும் பேரழகு என்ற வார்த்தைக்கு இன்றும் அர்த்தம் கொடுப்பவள் பேரழகி கிளியோபட்ரா. இவளது அழகைக் கண்டு மயங்காத ஆண்களே கிடையாது என வரலாறு கூறுகிறது.

எகிப்தின் கறுப்பு பேரழகியான கிளியோபட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவளுக்காக ஒரு பிரம்மாண்ட அரண்மனையையே கட்டியுள்ளார்.

எங்கே புகழும் பணமும் அழகும் கொட்டிக் கிடக்கிறதோ அங்கே பல மர்மங்களும் மறைந்திருக்கும். அந்த வகையில் எகிப்தின் அழகி கிளியோபட்ரா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

Oruvan

7ஆம் கிளியோபட்ரா

சரித்திரங்களில் பேரழகி என வர்ணிக்கப்படும் கிளியோபட்ரா, 7 ஆம் கிளியோபட்ரா ஆவாள். இவளுக்கு முன்னர் ஆறு கிளியோபட்ராக்கள் வாழ்ந்துள்ளனர்.

சீசர், அந்தோனியுடனான உறவு

பேரழகி கிளியோபட்ராவுடன் சீசரும், அந்தோனியும் உறவில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும் ரோமுக்கும் எகிப்துக்கும் இடையில் இருந்த அரசியல் உறவே பிரதான காரணம்.

Oruvan
Queen cleopatra

சகோதரர்களை கொன்றாள்

தனக்கு முன்பு எகிப்து நாட்டை ஆண்டு வந்த அவளது இரு சகோதரர்களையும் அடுத்தடுத்து கொன்றாள் கிளியோபட்ரா. இதற்குக் காரணம் தானே அந்த நாட்டை ஆள வேண்டும் என நினைத்தாள்.

எழுத்தாளர் கிளியோபட்ரா

கிளியோபட்ரா ஓர் எழுத்தாளரும் ஆவாள். ‘காஸ்மெடிக்ஸ்’ என்ற மருத்துவ ஆய்வுப் புத்தகத்தை இவள் எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

சீசர் இறப்பு

சீசர் கொலை செய்யப்பட்டபோது கிளியோபட்ரா ரோமில்தான் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Oruvan

கிரேக்க நாட்டைச் சேர்ந்தவள்

கிளியோபட்ரா எகிப்து நாட்டை ஆண்டவள் எனக் கூறப்பட்ட போதிலும் உண்மையில் அவள் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவள் என சில வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளன.

கிளியோபட்ராவின் மகன்கள்

கிளியோபட்ராவுக்கு நான்கு மகன்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஓர் இரட்டையர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நால்வரில் ஒருவரைத் தவிர மற்ற மூன்று மகன்களும் சிறு வயதிலேயே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Oruvan
Queen cleopatra

அரசியலில் நேர்த்தியானவள்

என்னதான் கிளியோபட்ரா சீசர் மற்றும் அந்தோனியுடன் உறவில் இருந்தாலும்கூட தனது இராஜ்ஜியத்தை பெரிதாக்குவதில் சிறிதும் கோட்டை விடவில்லை. மிகவும் நேர்த்தியாக அரசியல் செய்தாள்.

கிளியோபட்ராவின் மரணம்

கிளியோபட்ரா பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்பட்டாலும் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஒருவேளை ஊசியினூடாக விஷத்தை அவளது உடலில் செலுத்தி அதை பாம்பு கடித்ததாக மாற்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Oruvan