குழந்தைகளிடம் அத்துமீறினால் ஆண்மை நீக்கம்! மடகாஸ்கார் அதிரடி

0
126

மடகாஸ்கரில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

குழந்தைகள் துஷ்பிரயோகம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இங்கு 2,80,00,000 மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் மடகாஸ்கரில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக 600 வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

அதேபோல் கடந்த மாதத்தில் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் இதற்கு கடுமையான சட்டம் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 10 வயதிற்குட்பட்ட குழந்தையை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படும். 

Madagascar castratioin law passed

அதேபோல், 10 முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக துஷ்பிரயோக செயலில் ஈடுபடும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும்.

மேலும், 14 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறுமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  

Madagascar castratioin law passed

ஜனாதிபதி Andy Rajoelina

கடந்த பிப்ரவரி 2ஆம் திகதி இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் தற்போது உயர் அரசியலமைப்பு நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி Andy Rajoelina இதற்கு கையெழுத்திட்டார். 

Andry Nirina Rajoelina

நீதி அமைச்சர் Landy Mbolatiana, குழந்தைகளுக்கு எதிரான பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதால், இது அவசியமான நடவடிக்கை என்று கூறினார்.