விஜயகாந்த்-விஜய்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த ஒரு சோகமான விஷயம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மறைவு தான்.
கடந்த வருடம் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த எவ்வளவு கூட்டம் கூடியது என்பது நமக்கே நன்றாக தெரியும்.
லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு கண்ணீர் மல்க அனைவரும் பிரியாவிடை கொடுத்தார்கள்.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேரில் சென்றார், கண்ணீரிலும் மூழ்கினார்.
விஜய்யின் கோட்
நடிகர் விஜய்யின் நடிப்பில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.
படத்திற்கான படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வர தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதுஎன்னவென்றால் தற்போது இந்த படத்தில் AI தொழில் நுட்பம் மூலம் விஜயகாந்த்தை கொண்டு வர இருக்கின்றனராம். இதற்காக கேப்டன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வெங்கட் பிரபு அனுமதி பெற்று இருக்கிறாராம்.
கேப்டன் வரும் காட்சிகளை படத்தின் ரீலுசுக்கு முன்னரே தங்களுக்கு காட்ட வேண்டும் என்று மட்டும் கேப்டன் குடும்பம் நிபந்தனை வைத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.