நெத்தன்யாஹூவின் உயிர் எங்கள் கையில்..! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

0
54

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) விடுத்துள்ளார்.

பாரிய தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலானது அதன் அண்டை நாடுகளுக்கும் பரவலாம் என்ற பதற்றமும் அச்சமும் காணப்படும் நிலையிலேயே ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமரின் உயிர் எங்கள் கையில் என ஈரான் கடும் எச்சரிக்கை | Iran Threatened Israel Prime Minister

இதேவேளை லெபானின் மீது பாரிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அது இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூவின் இறுதி முடிவுவாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.