இலங்கையில் இன்று முதல் இந்தியாவின் UPI கட்டண முறை: மெய்நிகர் மூலம் ஆரம்பித்து வைக்கும் இந்திய பிரதமர்

0
85

இந்திய ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவு முறை (Unified Payment Interface – UPI) இன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதற்கு இந்த நடவடிக்கை இன்றியமையாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். UPI என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நிதிக் கொடுப்பனவு முறையாகும்.

ஒரு தனி நபரோ அல்லது வணிக நிறுவனமோ இந்த அமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட எந்த வங்கியின் மூலமாகவும் உடனடியாக பணம் செலுத்தும் வாய்ப்புள்ளது.

இதனிடையே, இந்திய ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவு முறை சேவையினை அண்டை நாடுகளான இலங்கை மற்றும் மொரீஷியஸில் இன்று (12) இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் (Pravind Jugnauth) ஆகியோர் மெய்நிகர் ஊடாக கலந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.