பாடசாலைகளுக்கு அண்மையில் புலனாய்வு பிரிவினர் குவிப்பு..

0
65

பாடசாலைகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் கொண்டு வருபவர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதியமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் கொண்டு வருபவர்கள் அவற்றை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதும் அந்த நபர்கள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டி உள்ளார்.

போதைப்பொருள் விநியோகம்

யுக்திய நடவடிக்கையின் போது பாடசாலைகளை சுற்றி போதைப்பொருள் கடத்திய 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் உள்ள 107 பாடசாலைகள் போதைப்பொருள் அபாய நிலையில் உள்ள பாடசாலைகள் என தெரியவந்துள்ளது.