திருகோணமலையை வளைத்துப்போட நினைக்கும் இந்தியா!

0
274

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

திருகோணமலையை வளைத்துப்போட நினைக்கும் இந்தியா! | Dockyard At Trincomalee Port India Research

இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையை வளைத்துப்போட நினைக்கும் இந்தியா! | Dockyard At Trincomalee Port India Research