இந்தியாவிற்குள் நுழைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கைத் தமிழ் பிரஜைகள்!

0
98

தமிழகத்தில் ராமேஸ்வரம் பகுதிக்கு 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இலங்கை தமிழ் பிரஜைகளை இன்றையதினம் (07-02-2024) வந்தடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் – அரிச்சல்முனை பகுதியில் உள்ள மணல் திட்டில் குறித்த இலங்கை பிரஜைகள் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டனர்.  குறித்த இலங்கை பிரஜைகள் விசாரணைக்குப் பிறகு மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை 294 இலங்கைத் தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.