நமீபியா அதிபர் காலமானார்

0
147

நமீபிய அதிபர் ஹேஜ் ஜிங்கோப் (Hage Geingob) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஹேஜ், விண்ட்ஹோக்கில் உள்ள லேடி பொஹம்பா மருத்துவமனையில் நேற்று(04) அதிகாலை காலமானார்.

நமீபிய அதிபர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளதோடு, அதிபர் Hage Geingob இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவ பரிசோதனை

2014-ஆம் ஆண்டில், நோய்வாய்ப்பட்ட ஜிங்கோப், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையில் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டார்.

இந்நிலையில், அண்மையில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்திருந்தது. ஆனால் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னராகவே அவர் உயிரிழந்தார்.

தனது 82 ஆவது வயதில் உயரிழந்த அதிபர்  ஹேஜ் ஜிங்கோப் 2014ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அடுத்த ஆண்டே அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.