வேர்க்கடலையில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அதுமட்டுமின்றி வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
அந்தவகையில் தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேர்க்கடலையின் மருத்துவ குணங்கள்
புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவுகிறது. நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைத்து சாப்பிடுவதால் முதுகு வலிக்கு சிறந்த தீர்வாக அமையும்.
வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் 90 வீதம் வரை குறைவடைகின்றது.
இந்த ஊட்டச்சத்துக்களால், வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும்.
இது, வேர்க்கடலையில் ஆலிவ் ஆயிலில் காணப்படக்கூடிய ஓலிக் எனப்படும் ஒருவித அமிலமும் காணப்படுகிறது. இது உடலில் உள்ள செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து அவற்றை பாதுகாக்க துணைப்புரிகின்றது.
நார்சத்துக்களும், புரதமும் இரண்டையும் கொண்டுள்ள வேர்க்கடலைகள் உடலுக்கு சக்தி அளிப்பதுடன் உடல் எடையை ஒரு கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் உதவுகின்றது மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். வேர்க்கடலைகள் இயற்கையாகவே இதயத்திற்கு நன்மை கொடுக்கக்கூடிய நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்தி கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
இதனால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல் வேர்க்கடலைகளில் இன்சுலின் சுழற்சியை ஊக்குவிக்கும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது.
தினசரி காலையில் ஊறவைத்த வேர்க் கடலையை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.