இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் புகழாரம்

0
239

உலகில் ஏற்படக்கூடிய மாற்றங்களில், இந்தியா முன்னிலை இடத்தை வகிக்கும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவில் பங்கேற்று நாடு திரும்பிய மேக்ரான், தனது எக்ஸ் தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியா தொழில்நுட்ப ரீதியாகவும், ஜனநாயக பலத்துடனும், பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மேக்ரானின் வருகையால் இந்தியா -பிரான்ஸ் இடையிலான நட்பு வலுப்பெற்று உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.