பூஜா உமாசங்கர் தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெ ஜெ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகே சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தார்.
இவர் தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களான அஜித்குமார், ஆர்யா, ஜீவா, மாதவன் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். சிறிது காலம் நடித்துவிட்டு இந்தியாவிலிருந்து இலங்கை வந்த அவர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிரஷான் டேவிட் வேதாகன் என்பறை திருமணம் செய்து கொண்டு இலங்கையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
தொடர்ந்து சிங்கள திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த இவர் திடீரென சினிமா துறையில் காணாமல் போகவே இவரை பற்றிய வதந்திகள் பரவ தொடங்கின.
அதிலும் அவர் இந்தியா சென்று விட்டதாகவும் துறவறம் பூண்டு முக்தி நிலையை அடைந்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவ தொடங்கின. இதை பலரும் பல விதமாக பகிர்ந்துள்ளடதுடன் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இது உண்மையா, பூஜா தற்போது எங்கேயுள்ளார்?
பூஜா தற்போது இந்தியாவில் பெங்களூருவில் தனது கணவரோடு மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வருவதாக இலங்கையில பிரதான பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில்,
‘என் பெயரில் பல போலி பேஸ்புக் கணக்குகள் உள்ளன. அவையனைத்தும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன்.
அதுபற்றி எனக்குத் தெரியாது. பலவற்றை போலியாக விமர்சிக்கின்றார்கள். என்னிடம் யூடியூப் சேனல் எதுவும் இல்லை. எனது அனுமதியுடன் எனது இளைய சகோதரர் ஒரு யூடியூப் செனலை செய்கிறார். அது பொய்யும் அல்ல. சமூக வலைதளங்களில் நான் செய்ததெல்லாம் மதச் செய்திகளைப் பகிர்வதுதான்…’
‘நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதையெல்லாம் நான் இயேசுவால் பெற்றேன். என்னிடம் இப்படி ஒரு பொக்கிஷம் இருப்பது எனக்குத் தெரியாது. 2001ல் நான் கிறிஸ்தவளாக மாறினேன். யாரும் என்னை வற்புறுத்தவில்லை. பரலோகத்தில் இருக்கும் என் தந்தையுடனான பந்தம் எனக்குத் தெரியாது. வேண்டுதலின் போது அவை புரிந்து கொள்ளப்பட்டன. நான் பைபிளை நிறைய படித்தேன். தற்போது இறைவனை விசுவாசிக்கின்றேன்.’, ‘நான் துறவியாகவோ முக்தி நிலையையோ அடைய வில்லை. நான் படங்களில் நடிக்க மாட்டேன் எனவும் வதந்தியை கிளப்புகிறார்கள்.
‘வாழ்க்கையில் சலித்து ஆன்மிக பக்கம் சென்று விட்டேன் என்று பலர் நினைக்கிறார்கள். என்னிடம் ஒன்று மட்டுமே உள்ளது. அந்த இயேசு. அவர் என்னை ஒரு போதும் கைவிடவில்லை…’
பூஜாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா?
‘பிரஷானுக்கும் எனக்கும் காதல் திருமணம் தான் ஆனது. நானும் அவனும் ஒருவரையொருவர் அதிகம் காதலிக்கின்றோம். தற்போது நாங்கள் பெங்களூரில் இருக்கின்றோம். நானும் அவரும் பைபிளை நன்றாக படிக்கிறோம். நாங்கள் இருவரும் தேவாலயத்திற்கு செல்கிறோம்.
நடிப்பை விட்டு விலகுவது பற்றி பூஜா கூறியிருப்பது என்ன?
‘ரேணுகா அக்காவின் சரிகமா செய்யும்போது விடைபெற்றேன். ஏனென்றால் என் தந்தை என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று திட்டினார்.
நான் என் தந்தைக்கு திரையுலகை விட்டுவிடுவதாக உறுதியளித்தேன். 2023ல் தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றேன். எனக்கு 27 டிசம்பர் 2016 அன்று திருமணம் நடந்தது. பின்னர் இலங்கையிலேயே இருந்துவிட்டேன். அன்று முதல் இன்று வரை நான் என் கணவரோடு சந்தோசமாக தான் வாழ்கின்றேன். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்.’
‘நான் சினிமா துறையை விட்டு விலகிவிட்டேன். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்கிரிப்டைக் கண்டுபிடித்து சமூகத்திற்குத் தேவையான ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.’
இலங்கைக்கு மீண்டும் வருவாரா,?
‘பலர் குறுஞ் செய்திகளை அனுப்புகிறார்கள். பொய்ப் பிரச்சாரங்களால் நாங்கள் மன வருத்தத்தில் உள்ளோம். சிலர் அழுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். கடவுளே நான் எல்லாவற்றையும் விரும்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இலங்கையை என்னால் மறக்க முடியாது.
இந்த உலகத்திலேயே நான் இலங்கையை மட்டுமே அதிகம் நேசிக்கிறேன். அது என்றும் மாறாது. நாட்டுக்காக மக்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்கின்றேன். அவர்கள் சோகமாக இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு கூட இல்லை என எனக்கு தெரியும். நிச்சயமாக தாய் நாட்டுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வருவேன். என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.