மாலைதீவுக்கான வளர்ச்சி உதவித்தொகையில் பல கோடிகளை அதிகரித்த இந்தியா

0
143

இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மாலத்தீவுக்கான வளர்ச்சி உதவித் தொகையில் ரூ 600 கோடியாக 50 சதவீதம் உயர்த்தி இந்தியா அறிவித்துள்ளது.

அரசியல் நெருக்கடி

இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியுயர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களில் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதும், கடந்த ஆண்டு மட்டும் மாலத்தீவுக்கு என இந்தியா ரூ 400 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால் கூடுதலாக ரூ 370 கோடி செலவிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ரூ 600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு செலவிட்டுள்ள தொகையை விடவும் 22 சதவிகிதம் குறைவு என்றே கூறப்படுகிறது.

நட்பு நாடுகளின் முன்னுரிமைகளைப் பொறுத்து, இந்தியாவின் நிதியுதவி ஒத்துழைப்பு வர்த்தகம் முதல் கலாச்சாரம், மின்சாரம் முதல் பொறியியல், சுகாதாரம் முதல் குடியிருப்பு, தகவல் தொழில்நுட்பம் முதல் உள்கட்டமைப்பு, விளையாட்டு முதல் அறிவியல் வரை பங்களிக்க முன்வரும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இழிவான கருத்துகளை

பகை வளர்த்த நாடு... ஆனாலும் உதவித்தொகையில் பல கோடிகளை அதிகரித்த இந்தியா | India Aid To Maldives Higher Than Last Year

ஆனால் புதிதாக தெரிவான ஜனாதிபதி முகமது முய்சு சீனா சார்புடையவர் என்பதால், இரு நாடுகளின் நீண்ட கால உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு தலைவர்கள் சிலர் இழிவான கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் இந்தியர்களிடமிருந்து பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, ஜனாதிபதியாக தெரிவான பின்னர் முய்ஸுவின் சீனப் பயணம் இந்தியாவுடனான மாலத்தீவின் உறவுகளை அவர் எவ்வாறு நடத்த திட்டமிட்டுள்ளார் என்பதற்கான ஒரு சமிக்ஞையாகவும் பார்க்கப்படுகிறது.