குஜராத்தை இலகுவாக உலுக்கிப் பார்த்த நிலநடுக்கம்: 4.1 ரிக்டர் அளவில் பதிவு

0
142

குஜராத்தின் கச்சப் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வியாழக்கிழமை (01) காலை 8:06 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதன் ஆழம் 15 கி.மீ. ஆகும். முன்னதாக செவ்வாய்கிழமை லடாக்கின் லே பகுதியில் 3.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானமையும் குறிப்பிடத்தக்கது.