இலங்கையில் தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைச்சாயம் கண்டுபிடிப்பு

0
140

உலகில் முதன்முறையாக தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைக்கு பயன்படுத்தக்கூடிய இயற்கை சாயங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.

இதனூடாக உலகில் அதிக தேவையுடைய இயற்கை நிறமிகளின் பயன்பாட்டிற்கு சிறந்த தீர்வை வழங்க முன்வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 200,000 டன்களுக்கும் அதிகமான செயற்கை சாயங்கள் உலகளவில் துணிகளுக்கு வண்ணம் தீட்ட பயன்படுத்தப்படுகின்றன.

இலங்கையில் தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைச்சாயம் கண்டுபிடிப்பு | Dye From Discarded Orange Stalks In Sri Lanka

சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு

இவ்வாறு பயன்படுத்தப்படும் சாயங்கள் தண்ணீருக்குள் சென்று சூரிய ஒளி படுவதால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் நாட்டின் சுற்றாடல் பிரச்சினைக்கு நல்ல தீர்வை வழங்கும் வகையில் 14 சிரேஷ்ட விஞ்ஞானிகளையும் 80 ஆராய்ச்சி விஞ்ஞானிகளையும் கொண்ட இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகம் இயற்கை முறையிலான ஆடைச்சாயத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையில் தூக்கி எறியப்பட்ட ஆரஞ்சு தண்டுகளில் இருந்து ஆடைச்சாயம் கண்டுபிடிப்பு | Dye From Discarded Orange Stalks In Sri Lanka

இந்த கண்டுபிடிப்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதேவேளை ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆடை தயாரிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் டன் செயற்கை சாயங்களைப் பயன்படுத்துவதாக கண்டறியப்படடுள்ளது.

இவ்வாறு பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் மனித உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பதாக அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.